தேவையானவை:
தோலுடன் கூடிய முழு உளுந்து - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கரம் மசாலாபொடி - ஒருஸ்பூன்
மஞ்சப்பொடி - அரைஸ்பூன்
தனியாபொடி - ஒருஸ்பூன்
கொத்துமல்லித்தழை - ஒருகைப்பிடி
உப்பு - தேவையானஅளவு
சமையல்எண்ணெய் ஒருகுழிக்கரண்டி
உளுந்தை 4 மணி நேரம் முன்பு ஊறவைக்கவும்.
குக்கரில் 4 விசில் அளவுக்கு வேகவிடவும்.
வெங்காயம் தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்தவிழுதை, மசாலாபொடிகள்
சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்உப்பைச்சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் வெந்த பருப்பைப்போட்டு நன்கு கொதிக்க விட்டுஇறக்கவும்.
கொத்துமல்லித்தழை தூவி அலங்கரித்து சூடக்கப்பரிமாறவும்.
2. உருளை குருமா
தேவையானவை:
உருளைக்கிழங்கு - இரண்டு
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - இரண்டு
உப்பு - தேவையான அளவு
சோளமாவு - ஒரு தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாய் கீறி வைக்கவும்.
வாணலியில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.
கிழங்கு நன்றாக சேர்ந்து வெந்ததும் ஒரு தேக்கரண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து கிழங்குடன் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வேகவைத்து இறக்கவும்.
வேறு பாத்திரத்திற்கு மாற்றி கிழங்கு மேலே கொத்தமல்லி இலை தூவவும். பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி.
3. முட்டை குருமா
தேவையானவை:
முட்டை (வேக வைத்தது) - 4
பெரிய வெங்காயம் - 2
காஷ்மீர் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
எள்ளு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - ஒரு மேசைக்கரண்டி
ஆயில் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வதக்க:
சோம்பு - கால் தேக்கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - சிறிதளவு
மிளகாய் வத்தல் - 2
மிளகு - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 5
சின்ன வெங்காயம் - 7
இஞ்சி - சிறுத் துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா - சிறிதளவு
தக்காளி - 2
தேங்காய் - 1/4 மூடி
வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். எள்ளை தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும். ஆறின பிறகு மிக்ஸியில் எள்ளையும் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இதில் அரைத்து வைத்த மசாலா கலவையை ஊற்றி காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்தவுடன் நன்றாக கிளறி விட்டு சிம்மில் வைத்து விடவும்.
முட்டையை முக்கால்வாசி கீறி கிரேவியில் சேர்த்து 5 நிமிடம் சிம்மிலேயே வைக்கவும்.
சுவையான முட்டை குருமா தயார்.
4. பட்டர் பீன்ஸ் குருமா
- பட்டர் பீன்ஸ் - 200 கிராம்
- சின்ன வெங்காயம் - 1 கப்
- தக்காளி - 1
- இஞ்சி - சிறியதுண்டு
- பூண்டு - 5 பல்
- பச்சைமிளகாய் - 2
- மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
- மல்லித்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
- தாளிக்க:
- எண்ணெய் - 1 சிறிய குழிகரண்டி
- பட்டை - 1
- ஏலக்காய் - 1
- கிராம்பு - 1
- அரைக்க:
- தேங்காய்த்துருவல் - 1/4 கப்
- கசகசா - 1/4 டீஸ் ஸ்பூன்
- பெருஞ்சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கீற்று
- கொத்தமல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவைக்கேற்ப்ப
- குக்கரில் பட்டர் பீன்ஸை கழுவி அளவாக தண்ணீர் விட்டு 4 விசில் வந்ததும் இறக்கவும்
- வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும், இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும்.
- தக்காளி, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிகொள்ளவும், பச்சைமிளகாயை 2 ஆக கீறிவைக்கவும்.
- தேங்காய், பெருஞ்சீரகம், கசகசா சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், பச்சைமிளகாய், தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- அடுத்து அரைத்துவைத்துள்ள வெங்காயம் போட்டு பச்சைவாசம் போகும் வரை கிண்டவும். அடுத்து தக்காளி போட்டு நன்றாக குழையவதக்கவும்.
- பின்னர் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறிவிட்டு வேகவைத்துள்ள பட்டர்பீன்ஸை சேர்த்து கிளறி தேவைக்கு உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- எல்லாமும் சேர்ந்து வரும் போது அரைத்துவைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து கெட்டியான பதத்தில் இறக்கவும்.
- இறக்கும் முன்பு கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.
- சப்பாத்தி, பூரி, தோசை சூடு சாதத்திற்க்கும் மிகவும் பொருத்தம் இந்த குருமா
5. சப்பாத்தி குருமா.
- பெரிய வெங்காயம்-1
- தக்காளி-1
- மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-ஒரு சிட்டிகை
- உப்பு-தேவைக்கு ஏற்ப
- கேரட்-100
- பீன்ஸ்-100
- உருளை-1
- தாளிக்க :
- எண்ணெய்-ஒரு தேக்கரண்டி
- பட்டை,கிராம்பு,லவங்கம் -தலா ஒன்னு
- கருவேப்பில்லை,கொத்தமல்லி-தேவைக்கு
- அரைக்க :
- தேங்காய்-1 /2 மூடி
- பெருஞ்சீரகம்-1 தேக்கரண்டி
- பூண்டு-5 பல்
- இஞ்சி 1 அங்குல துண்டு
- அறைக்க கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும் .வெங்காயம்,தக்காளி, காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றை தாளிக்கவும்.அதில் வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை அதில் சேர்த்து கிளறவும்.பச்சை வாசனை போனதும் காய்களை சேர்க்கவும்.
- இரண்டு தம்ளர் தண்ணீர் ,மஞ்சள்,மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக மூடி வேக வைக்கவும்..குருமா சுண்டி வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சப்பாத்திக்கு குருமா ரெடி.
தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை - நூறு கிராம்
- அரைத்துக்கொள்ள:
- தேங்காய் - நான்கு துண்டு
- தக்காளி - ஒன்று
- முந்திரி - ஏழு
- இஞ்சி - சிறிய துண்டு
- வெங்காயம் - சிறியது ஒன்று
- பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
- மிளகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
- எண்ணெய் - தாளிக்க
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
முதலில் கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரைக்க வேண்டியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். | |
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த அரைத்த கலவையை போடவும். மிளகாய் பொடி மற்றும் உப்பு போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். | |
அதன் பின்னர் கடலையை போட்டு கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். | |
கலவை நன்கு திக்கானதும் கொத்தமல்லி. தூவவும். | |
இது சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். |
7. பேபிபொட்டேடோ கிரேவி
தேவையானவை:
- சிறிய உருளைக்கிழங்கு - 250 கிராம்
- வெங்காயம் - 2
- இஞ்சி - விரல் அளவு
- பூண்டு - 10 பல்
- வரமிளகாய் - 5
- கசகசா - சிறிதளவு
- டொமேடோ கெட்சப் - 5 மேசைக்கரண்டி
- கொத்தமல்லி - கால் கட்டு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு
உருளைக்கிழங்கை முழுதாக வேக வைத்து தோலுரித்து வைக்கவும். | |
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, வரமிளகாய், கசகசா, வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். | |
கடாயை அடுப்பில் வைத்து சிறிது தாரளமாக எண்ணெய் விட்டு வேக வைத்த உருளைக்கிழங்கை மேல்புறம் சற்று மொருமொருவென ஆகும்படி பொரித்து எடுத்து தனியே வைக்கவும். | |
பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அரைத்த மசாலாவை போட்டு நன்றாக வதக்கவும். | |
அதில் வறுத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். | |
நன்றாக வதங்கியவுடன் டொமேடோ கெட்ச்சப் சேர்க்கவும். 3 நிமிடம் வதங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும். | |
லேசான இனிப்பு சுவையுடன் பேபி பொடேடோ கிரேவி தயார். சப்பாத்தி, பூரிக்கு மிகவும் சுவையாக இருக்கும். |