- கீரை - ஒரு கட்டு
- சின்ன வெங்காயம் - பத்து (பொடியாக நறுக்கியது)
- வரமிளகாய் - இரண்டு
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி
- தாளிக்க:
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கீரையை நன்றாக அலசி வைக்கவும். அலசிய கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். | |
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். | |
அதில் சுத்தப்படுத்திய கீரையை சேர்க்கவும். | |
கீரை வதங்கியதும் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். | |
ஒரு நிமிடம் வதங்கியதும் இறக்கவும். சூடான சுவையான கீரை பொரியல் ரெடி. |
2. அவரைக்காய் பொரியல்
- பட்டை அவரைக்காய் - நூறு கிராம்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - ஒன்று
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- முட்டை - ஒன்று
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க:
- எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
- கடுகு - சிறிது
அவரைக்காய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி தேவையானவற்றை எடுத்து வைக்கவும். | |
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெடித்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். | |
வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும். | |
தண்ணீர் வற்றி நன்றாக அவரைக்காய் வெந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். | |
முட்டை அவரைக்காயில் நன்றாக படுமாறு எல்லா புறமும் பிரட்டி விட்டு வேக வைக்கவும். | |
முட்டை அவரைக்காயுடன் ஒட்டி உதிரியாக வந்ததும் அடுப்பை நிறுத்தி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி. |
3. வாழைத்தண்டு பொரியல்
- வாழைத்தண்டு - ஒன்று (சிறியது)
- முருங்கைக்கீரை - ஒரு கப்
- கடலைப்பருப்பு - 50 கிராம்
- சின்ன வெங்காயம் - 20
- வரமிளகாய் - 4
- தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி
- கடுகு - கால் தேக்கரண்டி
- உளுந்து - கால் தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். கீரையை சுத்தப்படுத்தி கழுவி வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். | |
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய், வெங்காயம் போட்டு தாளிக்கவும். | |
அதனுடன் கீரையை போட்டு வதக்கவும். | |
குக்கரில் வாழைத்தண்டு, கடலைபருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். | |
கீரை வெந்ததும் வேக வைத்த வாழைத்தண்டு கடலைப் பருப்பு போட்டு உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். | |
கடைசியில் தேங்காய் துருவல் போட்டு பரிமாறவும். |
4. குடைமிளகாய் பொரியல்
- குடைமிளகாய் - ஒன்று
- உருளைக்கிழங்கு - 4 சிறியது (பெரியதாக இருந்தால் 2)
- வெங்காயம் - ஒன்று
- தக்காளி - கால் பகுதி
- பூண்டு - 3 அல்லது 4 பல்
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
- தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- தாளிக்க:
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும். | |
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து தட்டி வைத்துள்ள பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். | |
பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். | |
காய் சிறிது வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். உப்பின் அளவை சரிப் பார்த்துக் கொள்ளவும். | |
அவ்வப்போது கிளறி விடவும். | |
தண்ணீர் வற்றியதும் சுருள கிளறி அடுப்பை அணைத்து விடவும். | |
சுவையான குடைமிளகாய்-உருளைக்கிழங்கு பொரியல் தயார். |
5. காரட் பொடிமாஸ்
- காரட் - 3
- வெங்காயம் - 1
- பூண்டு - 5
- பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க
- கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். காரட்டை துருவி வைக்கவும். | |
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும். | |
வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். | |
பின்பு துருவிய காரட் சேர்த்து வதக்கவும். | |
உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். | |
கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான காரட் பொடிமாஸ் ரெடி. |
6. ப்ரோக்கோலி பொரியல்
- ப்ரோக்கோலி - ஒன்று
- பெரிய வெங்காயம் - ஒன்று
- இஞ்சி - சிறிது
- பூண்டு - 5 பல்
- வரமிளகாய் - 2
- கொத்தமல்லி தழை - சிறிது
- உப்பு - தேவைக்கு
- தாளிக்க :
- கடுகு - சிறிது
- கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
- எண்ணெய் - தாளிக்க
முதலில் ப்ரோக்கோலியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.மிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை நசுக்கிக் கொள்ளவும். | |
ப்ரோக்கோலியை ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் | |
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிது மல்லித் தழையை போட்டு வதக்கவும் | |
நன்கு வதங்கியதும் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். | |
பிறகு வேக வைத்த ப்ரோக்கோலியை போட்டு தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டி எடுக்கவும். | |
சுவையான சத்தான பொரியல் ரெடி. |
7. கத்திரிக்காய் பிரட்டல்
- கத்திரிக்காய் - 5
- வெங்காயம் - 2
- தக்காளி - பாதியளவு
- மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்து கொள்ளவும். | |
கத்திரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். வேர்கடலையையும், தேங்காய் துருவலையும் தனித் தனியே வாணலியில் வறுத்து வேர்கடலையை தோல் நீக்கி விட்டு இரண்டையும் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். | |
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். | |
வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். | |
பின்பு நறுக்கின கத்திரிக்காய்களை சேர்த்து நன்கு பிரட்டி சிறிதளவே தண்ணீர் தெளித்து தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேக விடவும். | |
பின்பு மூடியை திறந்து கிளறி விட்டு நன்கு வெந்து இருக்கும் நிலையில் பொடித்த வேர்க்கடலை பொடியை தூவி பிரட்டி விட்டு சிம்மிலேயே இரண்டு நிமிடங்கள் விடவும். | |
நன்கு எல்லாம் பிரண்டு வாசமாக இருக்கும். அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கவும். இதை சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும். |