1. பச்சை வெங்காய சட்னி
- உரித்த சின்ன வெங்காயம் - 1 கப்
- வரமிளகாய் - 8 அல்லது 10
- புளி - கோலி அளவு
- கல் உப்பு - தேவையான அளவு
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உ.பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- எண்ணை - 1 குழிக்கரண்டி
- மிளகாய், உப்பு, புளி மூன்றையும் முதலில் மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும். 1 ஸ்பூன் தண்ணீர் விட்டு 2 நிமிடம் ஊர வைத்து மீண்டும் மிக்ஸியை ஓட்டவும். கடைசியாக வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும்.
- கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணை விட்டு கடுகு, உ.பருப்பு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து எண்ணையுடன் சட்னியில் சேர்த்து கலக்கவும்
- சுவையான கார சட்னி தயார். கோதுமை தோசை, ரவா தோசை,மைதா தோசைக்கு செம காம்பினேஷன்.
No comments:
Post a Comment