1. ஸ்வீ ட் பொங்கல்
ஸ்வீட் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1கப்
சிறுபருப்பு - 1/4கப்
வெல்லம் - 1கப்
பால் - 1 1/2கப்
தண்ணீர் - 1 1/2கப்
மில்க்மெயிட் - 1/4 கப்
நெய் - 50கிராம்
முந்திரி - 25 கிராம்
காய்ந்த திராட்சை - 10கிராம்
ஏலக்காய்பொடி - 1சிட்டிகை
பட்டை - சிறிய துண்டு
செய்முறை:
முதலில் வாணலியில் சிறுபருப்பை கொஞ்சம் வறுத்து தனியாக வைக்கவும்.
அரிசியினை அலசிவிட்டு இதனுடன் வறுத்த சிறுபருப்பு பால் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
அரிசி நன்றாக மசிந்து இருக்க வேண்டும்.
வெல்லத்தில் சிறுது தண்ணீர் ஊற்றி காய்ச்சவும். இந்த பாகினை சாதத்துடன் சேர்க்கவும்.
அடுப்பினை சிம்மிலே வைக்கவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, காய்ந்த திராட்சை, முந்திரி போட்டு வறுத்து நெய்யுடன் சாதத்தில் ஊற்றவும்.
இதனுடன் ஏலப்பொடி, மில்மெயிட் ஊற்றி 5 நிமிடம் கிளறிவிட்டு இறக்கவும்.. சுவையான ஸ்வீட் பொங்கல் ரெடி
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர்
2. ஈசியாக செய்யலாம் ரஸகுல்லா & ரஸமலாய்
தேவையான பொருட்கள்:பால் - 2லிட்டர்
சீனி - 1/2 கிலோ
ரவை - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
செய்முறை:பாலை கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து திரிய வைக்கவும்.
அப்படியே 10 நிமிடம் இறக்கி வைத்து, மெல்லிய துணியில் வடிக்கட்டவும். ஈரம் முழுவதும் வடியும் வரை கட்டி தொங்கவிட்டு வைக்கவும்
கைகளால் மிருதுவாக பிசையவும். இதடனுடன் ரவை சேர்த்து பிசையவும்
தண்ணீர் ,சீனி கலந்து சீனி பாகு தயார் செய்யவும்
இதை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி வைக்கவும்.
இதை அப்படியே சர்க்கரை பாகில் போட்டு 15 நிமிடம் வேக விடவும்.
8மணி நேரம் ஊறிய பிறகு சாப்பிடவும்
சுவையான ரஸகுல்லா ரெடி
ரஸமலாய் செய்முறை:பால் 1 லிட்டர்
ஏலக்காய் 2
முந்திரி, பாதம், பிஸ்தா தேவைக்கு
குங்குமப்பூ சிறிது
சீனி
பாலை நன்றாக சுண்ட காய்ச்சிவும். 1/4லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்.
இதில் சீனி, ஏலக்காய் சேர்த்து நன்றாக சுண்ட காய்ச்சவும். பிறகு இதில் நீட்டமாக அறிந்த முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்க்கவும்.. நன்றாக பால் சுண்டிய பிறகு கொஞ்சம் ஆறவிடம் இதில் செய்து வைத்த ரஸகுல்லாவை சேர்க்கவும்.. இதன் மேல் குங்குமப்பூ தூவி ஃப்ரிஜில் 2 மணி நேரம் வைத்து பிறகு ஜில்லூனு ரஸமலாய் சாப்பிடவும்..
3. பைனாப்பிள் கேசரி - pineapple kesari
தேவையானவை
ரவை – 100 கிராம்
நெய் – 50 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
முந்திரி – 25 கிராம்
உப்பு – ஒரு சிட்டிக்கை
தண்ணீர் – 300 மில்லி
ரெட் (அ) யெல்லோ கலர் - சிட்டிக்கை
பைனாப்பிள் துண்டுகள் (இரண்டு சிலைஸ்) –கால் கப்
சாப்ரான் எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
செய்முறை
சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.மேலும் சிறிது நெய்யில் ரவையையும் வறுத்து தனியாக வைக்கவும்.
மீதி நெய்யில் பாதி எடுத்து வைத்து விட்டு அதை ஊற்றி தண்ணீர் அளந்து சேர்த்து கலர் பொடி கலந்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்கும் போதுதீயின் தனலை குறைத்து ரவையை சிறிது சிறிதாக அரிந்து வைத்துள்ள பைனாப்பிளையும் சேர்க்கவும் போட்டு கிளறவும்.
.
கடைசியாக சாப்ரான் எசன்ஸ்,மீதி நெய்,வறுத்த முந்திரி அனைத்தையும் சேர்த்து கிளறி இரக்கவும், சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி,
பிளையின் கேசரிக்கு பைனாப்பிள் சேர்க்காமல் செய்யவும்.கிஸ்மிஸ் பழம் இருந்தால் அதையும்நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
4. பிஸ்தா கீர் - pista kheer

கீர் பல வகையாக தயாரிக்கலாம். இது சிம்பிளாக அரைத்து செய்யும் கீர் இதில் நெய் கூட சேர்க்கவில்லை. டயபட்டீஸ் உள்ளவர்கள் கூட இதை லோ பேட் பாலில் செய்து சுகர் பிரி சேர்த்து செய்து சாப்பிடலாம். இது வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்களுக்கு வெரும் பஞ்சி தோசைக்கு வைத்து கொடுக்க்லாம், மெயினாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை பிஸ்தா சேர்க்காமல் வெரும் பாலில் ரவை சேர்த்தும் செய்யலாம்.
தேவையானவை
பிஸ்தா – 25 கிராம்
அரி்ி - 1 மேசை கரண்டி
பிஸ்தா – பொடியாக அரிந்த்து (ஒரு மேசை கரண்டி)
பால் - அரை லிட்டர்
ரவை – ஒரு மேசை கரண்டி
ஏலக்காய் – 2
பிஸ்தா எஸன்ஸ் – ஒரு துளி
சர்க்கரை – 50 கிராம்
கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்
செய்முறை
அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும், பிஸ்தாவை வெண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து தோலை எடுக்கவும்.
பிஸ்தாவையும் , அரிசியையும் அரைத்து எடுக்கவும்।
பாலில் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து அரைத்த பேஸ்டை சேர்க்கவும்.
தீயின் தனலை குறைத்து ரவை தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.
கொதித்து திக்காகும் போது ஒரு துளி பிஸ்தா எஸன்ஸ் ஊற்றி பொடியாக
அரிந்த பிஸ்தாவை தூவி இரக்கவும்.
தோசை ,குட்டி பன்னுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
5.புளிப்பு மாம்பழ மாங்காய் தொக்கு
மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது, வாங்கி வந்தால் மாங்காய் மாம்பழம் இரண்டுமே புளிப்பு எல்லாத்தையும் தொக்க்காக செய்து விட்டேன்.. முன்று பழங்கள் இரண்டே நாளில் காலி.
தேவையானவைபுளிப்பு மாங்காய் - ஒன்று
புளிப்பு மாம்பழம் - இரண்டு
வெந்தயம் - வருத்து பொடி செய்தது அரை தேக்கரண்டி
கார மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - ஒரு மேசை கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
தாளிக்க
நல்லெண்ணை - முன்று மேசை கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - இரண்டு சிட்டிக்கை
மாங்காய், மாம்பழம் இரண்டையும் தோலிடுத்து பொடியாக நறுக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மாங்காய், மாம்பழம் இரண்டையும் சேர்த்து , வெந்தயப்பொடி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
கடைசியாக வெல்லம் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வதக்கி இரக்கவும்.
ஆறியதும் பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மாங்காய், மாம்பழம் இரண்டையும் சேர்த்து , வெந்தயப்பொடி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
கடைசியாக வெல்லம் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வதக்கி இரக்கவும்.
ஆறியதும் பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.
ஸ்ஸ்ஸ்ஸ் ருசி அபாரம்.
இதில் மாம்பழ குழம்பு, மாம்பழ கேசரி போன்றவைகளூம் செய்யலாம்
இதில் மாம்பழ குழம்பு, மாம்பழ கேசரி போன்றவைகளூம் செய்யலாம்
(கர்பிணி பெண்களுக்கு மசக்கை நேரத்தில் வாய்க்கு ருசிபடும்)
6. பீக்கோ - biko

தேவையானவை
தாய்லாந்து ரைஸ் – 50 கிராம்
கட்டியான தேங்காய் பால் – கால் கப்
கருப்பெட்டி வெல்லம் – 25 கிராம் ( ருசிக்கு தேவையான அளவு)
பிஸ்தா – பொடியாக அரிந்த்து ஒரு தேக்கரண்டி
//இது ஸ்டிக்கி ரைஸ், தாய்லாந்து அரிசியில் செய்த்து. அரிசி பார்க்கவே சில்கியா இருக்கும். இது பிலிப்பைனிகளின் காலை நேர உணவும் ஆகும் ரைஸ் கேக். என்று சொல்வார்கள்.//
செய்முறை
அரிசியை ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கனும், இரண்டு முறை தண்ணீரை மாற்றவும்.
ஊறிய அரிசியை வடிகட்டி இட்லி பானையில் வைத்து 45 நிமிஷம் அவிய விடவும். 10 நிமிடம் மட்டும் அதிக தணலிலும், பிறகு சிம்மில் வைத்து அவிய விட்டு இரக்கவும்.
கருப்பட்டி வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க் விட்டு கரைந்த்தும் வடிக்கவும்.
வடித்த வெல்ல கரைசலுடன் கட்டியான தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டவும்.
கொதித்து கட்டியாக இருக்கும். அவித்து வைத்துள்ள அரிசியில் கொட்டி கிளறி சமப்படுத்தி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து செட்டாகிவிடும்.பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.
குறிப்பு
சுவையான பீக்கோ ரெடி , இது நான் சுவைத்த சுவையின் படி இதை செய்துள்ளேன்.
கேரிஃபோர் , மாயாலால்ஸ் போன்ற இடங்களில் ஃபுட் செக்ஷனில் பிலிப்பைனிகளுக்கு ரெடி மேட் காலை உணவு இருக்கும்,அதில் ஒன்று தான் இந்த பீக்கோ, வாங்கி வந்து சுவைத்து செய்துள்ளேன்.அது இன்னும் புட்டரிசி போல் மென்று சாப்பிடுவது போல் இருந்தது, நான் கொஞ்சம் நல்லவே வேகவைத்தேன்.
இது பிலிப்பைனிகளின் உணவு, அவர்கள் ஓவனில் வைத்து செய்வார்கள். கருப்பட்டிக்கு பதில் அவர்கள் பிரவுன் சுகர் கேக்குக்கு பயன் படுத்துவது சேர்த்து செய்வார்கள்.
இதே இஸ்லாமியர்கள் இனிப்பு உருண்டை சோறு என்று குக்க்கரில் அரிசி+ வெல்லத்தை வேகவைத்து உருண்டை பிடித்து துருவிய தேங்காய் சேர்த்து செய்வார்கள்.
7. சிகப்பரிசி மாவு புட்டு
தேவையானவை
சிகப்பரிசி புட்டு மாவு – 400 கிராம்
தேங்காய் துருவல் – அரை முறி (முழு தேங்காயில் பாதி)
சர்க்கரை – 150 கிராம்
நெய் – 25 கிராம்
செய்முறைஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டி யில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து எடுக்கவும்.
அவிந்து புட்டு மணம் வந்த்தும் அதை ஒரு வாயக்ன்ற பாத்திரத்தில் கொட்டி தேங்காய் துருவல்,சர்க்கரை சேர்த்து கிளறி நெய்யை உருக்கி ஊற்றவும்.
பால் பழம் சேர்த்து பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கூடவே ஆஃப் பாயில் (அ)வெங்காய முட்டை சேர்த்து சாப்பிட நல்ல் இருக்கும்.
இதுக்கு சர்க்க்ரை சேர்க்காமல், சென்னா மசாலா, முழுபாசி பயறு மசாலா தொட்டும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாழைபழம் சேர்த்து உருண்டையாக உருட்டி வைத்தால் சத்தமில்லாமல் காலி ஆகும்.
8. கேசரி லட்டு - kesari laddu
தேவையான பொருட்கள்
ரவை = ஒரு கப்
பட்டர் = கால் கப்
சர்க்கரை = ஒரு கப்
நெய் = இரண்டு தேக்கரண்டி
பாதம், முந்திரி = ஐந்து
கிஸ்மிஸ் பழம் = ஆறு
கிஸ்மிஸ் பழம் = ஆறு
ரெட் கலர் பொடி = இரண்டு பின்ச்
செய்முறை
1. நெயில் பாதம் ,முந்திரி பொடியாக அரிந்து,கிஸ்மிஸ் சேர்த்து கருகாமல் வறுத்து தனியாக வைக்கவும்.பட்டரை உருக்கி அதில் ரவையை போட்டு லேசான பொன்னிறமாக வறுக்கவும்.
2. அதற்குள் பக்கத்து அடுப்பில் ரவை ஒரு கப்பிற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்து அதில் கலர் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
3. கொதித்ததும் வறுத்து கொண்டிருக்கும் ரவையில் கொட்டி கை விடாமல், கட்டி தட்டாமல் ஊற்றி கிளறவும்.
4. ரவை சிறிது கெட்டியாகி வரும் போது சர்க்கரை கொட்டி கிளறி, வறுத்த முந்திரி,பாதம்,கிஸ்மிஸ் ஐ கலந்து இரக்கவும்.
ஆறியதும் அதை உருண்டைகளாக பிடித்தோ (அ) டைமண்ட் ஷேப்பிலோ கட் பண்ணவும்.
குறிப்பு
இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.முந்திரி பாதத்தை பொடித்தும் போட்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.
நொய் உருண்டை
I am sending these recipes to nithu's kitchen celebrate Sweet laddu event


இன்று என் அம்மாவின் பிறந்த நாள், துஆ செய்யுங்கள். அருமையான சுவையான என் சமையலை உலகமே சுவைத்து கொண்டிருக்கும் அட்டகாசமான சமையலை சொல்லி தந்த தாயிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உஙக்ள் எல்லோரின் வாழ்த்தும் என் அம்மாவுக்கே.
( யாராவது எங்க வீட்டுக்குவருவதாக இருந்தால் அங்கு சூப்பராக இஞ்சி சாயா கிடைக்கும் அங்கேயே போய் குடித்து கொள்ளலாம் என்று வருவார்கள்.கூடையில் பழங்கள் கொண்டு வந்து விற்கும் பழக்காரர் , அந்த கூடைய இரக்கி வைத்ததும் அவர் முதலில் செம்பு நிறைய தண்ணீர கொடுத்துட்டுதான் பழமே வாங்குவார்கள்.
வீட்டு வேலக்காரி வந்தாலும் முதலில் அவளுக்கு டீ குடிக்க சொல்லிட்டு தான் வேலையே பார்க்க சொல்லுவாங்க./
அத ஏன் கேட்குறீங்க 20 வருடம் முன் மாப்பிள்ளைய ஏற்போட்டில் வரவேற்க வரும் போது கூட பிளாஸ் ஃபுல்லா இஞ்சி டீ தான் , ஹஸ் சந்தடி சாக்குல இந்த இஞ்சி டீ கொடுத்தே மயக்கிட்டாங்க என்பார். அம்மா ஹரீரா பால் நல்ல செய்வாங்க அதை தான் கொடுக்கலாம் என்று இருந்தேன் , போட்டோ எடுக்கல.
9. ஈத் ஸ்பெஷல் மிட்டாகானா
தேவையான பொருட்கள்
நல்ல தரமானபாசுமதி அரிசி – கால் கப்
கேசரிகலர் மஞ்சள் (அ) சிவப்பு
உப்பு – அரை சிட்டிக்கை
இனிப்பில்லாத கோவா – ஒரு மேசை கரண்டி
சர்க்கரை – அரைகப்
நெய் – இரண்டு மேசை கரண்டி
தாளிக்க
பட்டை – சிறிய துண்டு
முந்திரி , ரெயிசின்ஸ் – தலா ஆறு
கேசரிகலர் மஞ்சள் (அ) சிவப்பு
உப்பு – அரை சிட்டிக்கை
இனிப்பில்லாத கோவா – ஒரு மேசை கரண்டி
சர்க்கரை – அரைகப்
நெய் – இரண்டு மேசை கரண்டி
தாளிக்க
பட்டை – சிறிய துண்டு
முந்திரி , ரெயிசின்ஸ் – தலா ஆறு
செய்முறை
முதலில் அரிசியை களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க வைத்து சாதம் வடிப்பது போல் உதிரியாக வடிக்கவும்.(தண்ணீர் கொதித்து அரிசி தட்டியதும் அதில் கலர் பொடி + உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிக்கவும்.
நெய்யை உருக்கி முந்திரி ரெயிசின்ஸ் கருகாமல் வறுத்து எடுத்துவிட்டு, அதில் பட்டை தாளித்து வடித்த சாத்த்தை கொட்டி கிளறி சர்க்கரை சேர்த்து சாதம் உடையாமல் கிளறவும்.
சர்க்கரை உருகும் போது கோவாவை சேர்த்து கிளறி சேர்ந்து வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி ரெயிசன்ஸை சேர்த்து கிளறி இரக்கவும்..
கோவா கிடைக்கவில்லை என்றால், இரண்டு மேசைகரண்டி நீடோ பால் பவுடரை அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிகக் விட்டு சுண்டி கோவா பதம் வந்ததும் அதை எடுத்து சேர்க்கவும்.
குறிப்பு:
கல்யான பிரியாணிக்கு ஏற்ற ஸ்வீட் (மிட்டாகானா) இதை நிறைய கல்யாணத்துக்கு செய்யும் போது பாதி டால்டா பாதி நெய் சேர்த்து செய்வார்கள். இதில் கொடுத்துள்ள அளவு முன்று பேர் சாப்பிடும் அளவு.
நிறைய செய்ய இந்த அளவு.
அரிசி – அரை கிலோ(நல்ல தரமான வசனை பாசுமதி அரிசி)
மஞ்சள் (அ) ரெட் கலர் பொடி – கால் தேக்கரண்டி உப்பு – கால் தேக்கரண்டி சர்க்கரை – ஒரு கிலோ இனிப்பில்லாத பால்கோவா - 100 கிராம்
டால்டா - 100 கிராம்
தாளிக்க
நெய் – 25கிராம்முந்திரி - 100 கிராம் கிஸ்மிஸ் பழம் – 25 கிராம்
பட்டை - ஒரு இரண்டு அங்குல துண்டு
மஞ்சள் (அ) ரெட் கலர் பொடி – கால் தேக்கரண்டி உப்பு – கால் தேக்கரண்டி சர்க்கரை – ஒரு கிலோ இனிப்பில்லாத பால்கோவா - 100 கிராம்
டால்டா - 100 கிராம்
தாளிக்க
நெய் – 25கிராம்முந்திரி - 100 கிராம் கிஸ்மிஸ் பழம் – 25 கிராம்
பட்டை - ஒரு இரண்டு அங்குல துண்டு
10. பேரித்தம் பழம் இனிப்பு சட்னி

தேவையான பொருட்கள்பேரித்தம் பழம் - எட்டு
கிஸ்மிஸ் பழம் - பதினைந்து
புளி - ஒரு கொட்டை பாக்குஅளவு
உப்பு - ஒரு பின்ச்
வெல்லம் - ஒரு பிட்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி (வருத்தது)
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
முதலில் கிஸ்மிஸ் பழம், பேரித்தம் ,புளியை கொட்டை நீக்கி விட்டு முன்றையும் கழுவி ஒரு பவுளில் வைத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வேக வைத்து வெளியில் எடுத்து ஆறவைக்க வேண்டும்.
ஆறியதும் அதை மிக்சியில் போட்டு அதனுடன், வெல்லம்,உப்பு,சீரகம், மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு சட்னி ரெடி.
குறிப்பு:பஜ்ஜி, சமோசா, வடை போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம்-
தேவையான பொருட்கள்
பிரெட் பாக்கெட் – 1 சிறிய பாக்கெட்
பால் – 4 டம்ளர்
இது பால் பவுடர் கரைத்து காய்ச்சி செய்தது.
நெய் – 50 கிராம்
டால்டா – பிரெட் பொரிக்க தேவையான அளவு
பாதம் – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
கிஸ்மிஸ் – சிறிது
ஏலக்காய் – 2
ரெட் கலர் பொடி – சிறிது
ஸ்வீட்ன கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 50 கிராம்
டால்டா – பிரெட் பொரிக்க தேவையான அளவு
பாதம் – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
கிஸ்மிஸ் – சிறிது
ஏலக்காய் – 2
ரெட் கலர் பொடி – சிறிது
ஸ்வீட்ன கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்
சர்க்கரை – 200 கிராம்
செய்முறை
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
பாலில் ஏலம் சேர்த்து கால் பாகம் வற்றும் அளவிற்கு காய்ச்சவும்

பிரெட்டை டால்டாவில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
எல்லா பிரெட்டையும் பொரித்து எடுக்கவும்
பாலில் பாதம் முழுவதும் + சிறிது முந்திரியை ஒன்றூம் பாதியுமாக பொடித்து சேர்க்கவும்.

பாலில் பொரித்து வைத்துள்ள பிரெட்டை உதிர்த்து சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பிறகு சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

கடைசியாக ஸ்வீட்ன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்
இடையில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, கலர் பொடியை கரைத்து சேர்த்து ஹல்வா பத்த்தில் கிளறவும்

கடைசியாக முந்திரியை பொடியாக அரிந்து , ரெயிஸின்ஸுடன் நெயில் வறுத்து சேர்க்கவும்

குறிப்பு:
கொஞ்சம் தளர்வாக கிளறினால் தான் நல்ல இருக்கும் ரொம்ப ரிச் ஸ்வீட்.
இன்னும் ஒன்று பாதத்தை முதலே பாலில் சேர்த்து கிளறுவதை விட கடைசியாக சேர்த்து கிளறினாலும் நரு நருன்னு நல்ல இருக்கும்.
பாலில் ஏலம் சேர்த்து கால் பாகம் வற்றும் அளவிற்கு காய்ச்சவும்
பிரெட்டை டால்டாவில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
எல்லா பிரெட்டையும் பொரித்து எடுக்கவும்
பாலில் பொரித்து வைத்துள்ள பிரெட்டை உதிர்த்து சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பிறகு சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
கடைசியாக ஸ்வீட்ன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்
கடைசியாக முந்திரியை பொடியாக அரிந்து , ரெயிஸின்ஸுடன் நெயில் வறுத்து சேர்க்கவும்
குறிப்பு:
கொஞ்சம் தளர்வாக கிளறினால் தான் நல்ல இருக்கும் ரொம்ப ரிச் ஸ்வீட்.
இன்னும் ஒன்று பாதத்தை முதலே பாலில் சேர்த்து கிளறுவதை விட கடைசியாக சேர்த்து கிளறினாலும் நரு நருன்னு நல்ல இருக்கும்.
பிரெட்டை மொருகலாக பொரித்ததும் தூளாக்காமல் வேண்டிய வடிவில் கட் செய்து ஒரு வாயகன்ற த்ட்டில் பரத்தி சுகர் சிரப்பில் போட்டு, அப்படியே மேலேயே காய்ச்சி ஊற்றி நட்ஸ்களை பொரித்து சேர்த்தால் ஹைத்ராபாத்தில் செய்யும் டபுள் கா மீட்டா ரெடி.



