அசைவம்



1. KFC லாலி பாப் KF clolipop




///இப்போது குழ‌ந்தைக‌ள் அதிக‌மாக‌ விரும்புவ‌து KFC சிக்க‌ன் தான் அந்த‌ அள‌விற்கு சுவை இல்லை என்றாலும் ஓர‌ள்விற்கு ந‌ல்ல‌வே இருக்கும். இது என் பிள்ளைகளுக்காக செய்து பார்த்தது. வெரும் ப‌ருப்பு சாத‌த்திற்கு தொட்டு கொள்ள ந‌ல்ல‌ இருக்கும்.//


தேவையான‌ பொருட்க‌ள்




ஊறவைக்க


லெக் பீஸ் - எட்டு துண்டு
இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
பூண்டு - ஐந்து பல்
தக்காளி = ஒன்று
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி



பிரட்டி கொள்ள




மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மைதா - ஒரு கப்
கார்ன் மாவு - கால் கப்
உப்பு - சிறிது
எண்ணை + பட்டர் - பொரிக்க தேவையாண அளவு

செய்முறை


1. சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வைக்கவும்.

2. வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி அனைத்தையும் அரைத்து அதில் உப்பு பேக்கிங்க் பவுடர் சேர்த்து சிக்கனில் ஊற்றி நன்கு பிசறி , முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முன்று மணி நேரம் ஊறவைக்கவும்

3. மைதா, கார்ன் மாவில் மிளகாய்தூள் மற்றும் உப்பை கலந்து ஊறிய சிக்கனை தண்ணீரை வடித்து இதில் பிரட்டி பொரித்தெடுக்கவேண்டும்.


4.பொரிக்கும் போது தீயை மீடியமாக வைத்து மூடி போட்டு நன்கு வெந்ததும் தீயை ஹயில் வைத்து பொரித்தெடுக்கவும்.

5. சுவையான kfc சிக்கன் லாலி பாப் ரெடி








ஈரல், (லிவர், கல் பக்காத்து ) மிகவும் சத்தானது, அதிக ஹிமோ குளோபின் சத்தும் இரும்பு சத்தும் இதில் அதிகமாக இருக்கு, தெம்பிலாதவர்களுக்கு எழுதி கொடுக்கும் அயர்ன் டானிக்குக்கு பதில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
இதை தக்காளி சேர்த்து கூட்டாகவோ, அல்லது சூப்பாகவோ, இதை சேர்த்து புலாவாகவோ செய்து சாப்பிடலாம்.
சுட்டு சாப்பிட்டால் இன்னும் நல்ல இருக்கும்.

தேவையானவை
    

ஆட்டு ஈரல்
200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 
ஒரு தேக்க்ரண்டி
கரம் மசாலா தூள் 
கால் தேக்கரண்டி
உப்பு 
தேவைக்கு
மிளகாய் தூள் 
அரை தேக்கரண்டி
வெங்காயம் 

பொடியாக அரிந்த்து
 ஒரு ஸ்பூன்
எண்ணை
இரண்டு தேக்கரண்டி
மிளகு தூள்
அரை தேக்கரண்டி
சோயா சாஸ் 
ஒரு தேக்க்ரண்டி
லெமன் ஜூஸ் 
கால் தேக்கரண்டி
கொத்துமல்லி தழை
சிறிது

அலங்கரிக்
கொட மிளகாய்


செய்முறை

ஈரலை சுத்தமாக சிறிது மஞ்சல் தூள்
சேர்த்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
வாயகன்ற வானலியில் எண்ணை ஊற்றி வெஙகய்ம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி அத்துடன் ஈரல், மிளகாய் தூள், உப்பு தூள் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்
2 நிமிடம் முடி போட்டு வேக விடவும்.
கடைசியாக சோயா சாஸ், மிளகு தூள், கரம்மசாலாதூள் தூவி மேலும் இரண்டு நிமிடம் வதக்கி இரக்கவும்.
கொத்துமல்லி தழை, கேப்சிகம் சேர்த்து அலங்கரிக்கவும்.

குறிப்பு:

 ஈரலை ரொம்ப நேரம் வேகவைத்தால் கல்லு மாதிரிஆகி கருப்பாகிவிடும்.
ஈரல் வேக மொத்தம் 6 நிமிடம் போதும் .
















சுவையான பிஷ் பிரியாணி சுவைக்க வாருங்கள்


தேவையான பொருட்கள் 


வஞ்சர மீன் - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 3/4கிலோ
வெங்காயம் - 5
தக்காளி - 4
பச்சைமிளகாய்- 4
கொத்தமல்லி - 1கட்டு
புதினா - 1 கட்டு
இஞ்சி பூண்டு விழுது - 3ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3ஸ்பூன்
மல்லித்தூள் - 1ஸ்பூன்
கலர் பவுடர் - சிறிது
உப்பு - தேவையான அளவு 


மீனில் தடவும் மசாலா : 


மல்லி தூள் - 2ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2ஸ்பூன்
எண்ணெய் - 3ஸ்பூன்
உப்பு - சிறிது 


தாளிக்க 

நெய் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 3
பிரிஜ்ஜி இலை - 1 


செய்முறை:வெங்காயம் , தக்காளி, பச்சமிளகாய் நீளவாக்கில் நறுக்கவும். மீனன சுத்தம் செய்து தனியாக வைக்கவும். 



சுத்தம் செய்த மீனில் மீன் மசாலாவை தடவி 1/2 மணி நேரம் பிரிஜில் வைக்கவும் 



மீனை தோசைக்கல்லில் ஃப்ரை பண்ணி எடுத்து தனியாக வைக்கவும். பொறித்த மீனின் தோலை எடுத்துவிடவும் கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு சிறுது வெங்காயத்தை ஃப்ரை பண்ணி தனியாக வைக்கவும் 




ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் ப்ரிஜ்ஜி இலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். . வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கொத்தமல்லி, புதினா போட்டு கிளறி விட்டு மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சிறிது போட்டு கிளறவும் 



பாஸ்மதி அரிசியினை 20 நிமிடம் ஊற வைத்து 3/4 பாகம் வேக வைத்து சாததை வடித்து தனியாக வைக்கவும் தேவைக்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இதில் கிரேவியினை போட்டு கிளறி வைக்கவும் 



வேறு ஒரு அடி கணமான பாத்திரத்தில் சிறுது எண்ணெய் ஊற்றி அதன் மீது பொறித்த வெங்காயம் பாதி தூவி அதன் மேல் கிரேவி கலந்த சாதம் போடவும் .அதன் மேல் ஃப்ரை பண்ணிய மீனை வைக்கவும். அதன் மேல் சாதம் போட்டு மெல்ல அழுத்தி விடவும் மேலே பொறித்த மீதி வெங்காயம் தூவவும். எலுமிச்சை பழம் பிழிந்து விடவும். அதன் மீது சிறுது தண்ணீரில் கலந்த கலரை சுற்றி வரை ஊற்றவும் . இருக்கமான மூடி போட்டு 10 நிமிடம் ஹையிலும், 15 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும் 










4. ஸ்பைசி இட்லி கட்லெட்:







குழந்தைகளுக்கு பிடித்த மாலை டிபன் இது...




தேவையான பொருட்கள்:
இட்லி யில் விரவி வைக்க:
இட்லி -5 (நீட்ட வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்)
காண்பிளவர் மாவு - 3ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்
சிக்கன் 65 பவுடர் - 1ஸ்பூன்
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
உப்பு
கலந்து வைக்கவும்:
முட்டை - 1
மிளகுத்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - 1/4ஸ்பூன்
பிரெட் கிரம்ஸ் - தேவைக்கு
பொறிக்க:
எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:
இட்லி துணடுகளை நீளவாக்கில் நறுக்கி விரவி வைக்க வேண்டிய பொருட்களை விரவிவைக்கவும்ட்ரையாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
முட்டையில் மிளகுத்தூள்உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைக்கவும்.
ரெடி செய்த இட்லி துண்டுகளை முட்டை கலவையில் முக்கி ரஸ்குத்தூளில் பிரட்டிவைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்த பிறகு இட்லித் துண்டுகளை போட்டுபொறித்து எடுக்கவும்...



சூடான சுவையான ஸ்பைசி இட்லி கட்லெட் ரெடி...

குழந்தைகளுக்கு பிடித்த மாலை டிபன் இது..



5. தயிர் சிக்கன் - Curd chicken / Yogurt chicken








எளிதில் செய்ய கூடிய தயிர் சிக்கன்…வாங்க…நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…..
          
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 1/4 கிலோ
·         தயிர் – 1/2 கப்
·         எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி

அரைத்து கொள்ள :
·         பூண்டு – 6 பெரிய பல்
·         இஞ்சி – 1 துண்டு
·         மிளகு – 10
·         சோம்பு – 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         சிக்கனை  சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

·         சிக்கனுடன் அரைத்த விழுது + தயிர் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.


·         கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.

·         சுமார் 10 – 15 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.


·         கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 1 – 2 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சிக்கன். இதனை சாலடுடன், சாதம் , சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க…


குறிப்பு :
மிளகுக்கு பதிலாக மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம்.

தயிரினை இஞ்சி பூண்டு விழுது அரைத்த பிறகு, அத்துடன் சேர்த்து 10 sec தயிரினையும் அரைத்தால் நன்றாக இருக்கும்.

தயிரின் புளிப்பின் அளவினை பொருத்து எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். புளிப்பான தயிர் என்றால் எலுமிச்சை சாறு தேவையில்லை.

இந்த சிக்கனை saladயுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்….




6. சிக்கன் கிரேவி:



தேவையானவை:

சிக்கன் - முக்கால் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2(பெரியது)
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மல்லி இலை - சிறிது
சக்தி கறி மசாலாதூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/4 தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - முக்கால் தேக்கரண்டி
ஏலக்காய், கிராம்பு, பட்டைதூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி




கோழியை கழுவி வைக்கவும். தக்காளியை நறுக்கி வைக்கவும்.

வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும்.

பின் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள், மிளகாய் தூள், கறி மசாலா தூள், சோம்பு தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

வதக்கிய பின் கோழியை போட்டு வதக்கி உப்பு, அரை டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.

கோழி வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான சிக்கன் கிரேவி ரெடி.




7.சிக்கன் மக்ரோனி:



தேவையானவை:


மக்ரோனி- 150 கிராம்
எழும்பில்லாத சிக்கன் -1/2 கிலோ
வெங்காயம்- 2
தக்காளி-1
கறிவேப்பிலை-1 கொத்து
பச்சைமிளகாய்-2
இஞ்சி,பூடு விழுது-3 ஸ்பூன்
தயிர்- 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
பட்டை,ஏலக்காய்,கிராம்பு(வாசனைத்தூள்) - 1/2 ஸ்பூன்
பட்டை-1 சிறு துண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-3
அன்னாசி பூ-2
பிரிஞ்சி-1
சிக்கன் மசாலா தூள்- 1 ஸ்பூன்
தனியா தூள்- 1/2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்- 3 மேசை கரண்டி
நெய்- 4 ஸ்பூன்


மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை,ஏலக்காய்,கிராம்பு,அன்னாசி பூ, பிரிஞ்சி சேர்க்கவும்.
பின்னர் மிளகாய்,கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.
அதில் தக்காளி பின்னர் எல்லாத்தூள்களையும், தயிர் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும்.
சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கலாம்.



8. சிக்கன் பிரியாணி



தேவையானவை:



கோழிக்கால் - ஒரு கிலோ
பாசுமதி அரிசி - 750 கிராம்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
புதினா இலை - ஒரு கட்டு
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
தக்காளி - ஒன்று
முழுப்பூண்டு - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கரம் மசாலா பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
பிரியாணி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தக்காளிப் பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 4
கறுவா (பட்டை) - ஒரு துண்டு
கிராம்பு - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், வெண்ணெய் அல்லது நெய் - ஒரு மேசைக்கரண்டி




கோழிக்காலை நான்கு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து அலசி வைக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியின் தோலை நீக்கி வைக்கவும்.

அரிசி மற்றும் மசாலாப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு அரிசியை முக்கால் பதத்திற்கு சாதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.

சுத்தம் செய்து வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் கோழியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் உப்பு, தக்காளிப்பழம் சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும்.

5 நிமிடம் கழித்து அரைத்த கொத்தமல்லி, புதினா விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்கவும். அடுத்து தக்காளி விழுது, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அதில் கரம் மசாலா பேஸ்ட், பிரியாணி பேஸ்ட், எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட் சேர்த்து மூடி வேகவிடவும். கோழி நன்கு வெந்ததும் குழம்பாக இருக்கும்பொழுது இறக்கி வைத்துவிடவும்.

ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அது உருகியதும் முதலில் சாதத்தைப் போடவும்.

அதன் மேல் இறக்கிவைத்திருக்கும் சிக்கன் குழம்பு கறியை விடவும். மீண்டும் அதன் மேல் சாதத்தை போட்டு அடுத்து குழம்பு கறி என்று இதுப்போல் மாறிமாறி செய்யவும்.

பிறகு ஒரு முறை சாதத்தை கிளறி மூடி வைத்து அடுப்பை சிம்மில் விடவும். ஐந்து நிமிடம் கழித்து பிறகு இறக்கவும்.

இப்பொழுது சுவையான சிக்கன் பிரியாணி தயார். இதனுடன் முட்டை அல்லது ஏதாவது ஒரு பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த சிக்கன் பிரியாணி குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.




9. போட்டி (குடல்)கத்திரிக்காய் சால்னா





ஆட்டிறைச்சி வகைகளில் குடலும் ஒன்று இந்த சால்னா வயிற்றிற்குரொம்ப நல்லதுசூப் வைத்து குடித்தால் வயிற்று புண் ஆறும்இது எங்கபாட்டி எனக்கு சொல்லிக்கொடுத்தது

தேவையான பொருட்கள்
ஆட்டு குடல் சால்னா (போட்டி குர்மா ) - முழுசு ஒன்று
வெங்காயம் - ஐந்து (பெரியது)
தக்காளி - நான்கு (பெரியது)
பச்சமிளகய் - 4
இஞ்சிபோண்டு பேஸ்ட் - 5  மேசை கரண்டி
கொத்து மல்லி - கால் கட்டு
புதினா - கொஞ்சம்
மிளகாய் தூள்  இரண்டரை தேக்கரண்டி
தனியா தூள் - இரண்டரை மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை முறி
எண்ணை - 5 தேக்கரண்டி
பட்டை,லவங்கம்ஏலம் தலா - இரண்டிரண்டு
கத்திரிக்காய் - அரை கிலோ
கடலைப்பருப்பு - கால் கப்










செய்முறை
குடலை மஞ்சள் தூள்கொஞ்சம் வினீகர்போட்டுநன்றாக பத்துநிமிடம் ஊற வைத்துஅதில் உள்ள அழுக்கைதேய்த்து கழுவவும்.
கிளீன் ஆன குடல்கிடைத்தால் பிரச்சனைஇல்லை.
சட்டியை காயவைத்துஎண்ணை ஊற்றி சூடுவந்ததும்பட்டை,லவங்கம்ஏலம் போடவும்போட்டு அரிந்து வைத்துள்ள்வெங்காயத்தை வத்க்கவும்.
வதங்கியதும் இஞ்சி போண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாகவதக்கவும்.
அத்துடன் குடலையும் போட்டு நல்ல பெறட்டவும்.பிறட்டி ஐந்து நிமிடம்சிம்மில் வைத்து பிறகு தக்காளி,பச்ச மிளகாய்மிளகாய் தூள்தனியாதூள்,மஞ்சள் தூள்உப்பு போட்ட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில்வைக்கவும்.
அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றிஅரை மணி நேரம்குக்கரில் வேகவிடனும்கடலைப்பருப்பை அந்த குக்க்கரிலேயே ஐந்துநிமிடம் ஊற வைத்து ஒரு சிரிய டப்பியில் மூடி போட்டு மூடி போட்டுவெயிட்டையும் போட்டு வேகவிடவும்.
வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ளே வைத்திருக்கும்கடலைப்பருப்பை லேசாக நச்சு போடவும்.
போட்டு கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும்அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு .கத்திரிக்காயை வெந்ததும்இறக்கிவிடவும்



10.  சிக்கன் பிரியாணி



தேவையானவை
பாசுமதி அரிசி – அரை கிலோ

Ø சிக்கன் - அரை கிலோ
Ø வெங்காயம் – கால் கிலோ
Ø தக்காளி – கால் கிலோ
Ø தயிர் - கால் டம்ளர்
Ø இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டரை மேசைக்கரண்டி
Ø கொத்தமல்லி - கால் கட்டு
Ø புதினா - எட்டு இதழ்
Ø பச்சை மிளகாய் - நான்கு
Ø மிளகாய் தூள் - 1 1/4 தேக்கரண்டி
Ø எலுமிச்சை - பாதி பழம்
Ø பட்டை - ஒரு இன்ச் அளவு ஒன்று
Ø கிராம்பு - இரண்டு
Ø ஏலம் - ஒன்று
Ø எண்ணெய் - கால் டம்ளர்
Ø நெய் - ஒரு தேக்கரண்டி
Ø உப்பு - தேவைக்கு








செய்முறை

Ø முதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

Ø எலும்புடன் சேர்ந்த சிக்கனை (அரை கிலோ) கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

Ø எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி போடவும் பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.

Ø இரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.

Ø தக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும். சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது. தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.

Ø தக்காளி வதங்கியதும் சிக்கனை போட்டு கிளறி தயிரையும் சேர்த்து நல்ல வேக விடவும்.

Ø மூடி போட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருக்கும்.Ø நல்ல வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு அரிசி உலை கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் கொஞ்சமாக லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கவும்.

(அப்ப தான் சாதம் உதிரியாக வரும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.)Ø ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கீழே கொட்ட வேண்டாம்)20 நிமிடம் தம்மில் விட்டு உடையாமல் கிளறி இரக்கவும்)




11. வெந்தயம் வெந்தயக்கீரை மீன்குழம்பு  











தேவையானவை


வஞ்சிரமீன்
அரை கிலோ
வெங்காயம்
200 கிராம்
தக்காளி, தக்காளி பேஸ்ட்
350 கிராம், 50கிராம்
பச்சமிளகாய்
2
மிளகாய் தூள்
2 தேக்கரண்டி
தனியாத்தூள்
2 மேசைகரண்டி
மஞ்சள் தூள், சீரகத்தூள்
தலா அரை தேக்கரண்டி
உப்பு
ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம்
ஒரு தேக்கரண்டி
வெந்தயக்கீரை
சிறிய கட்டு 1

புளி
ஒன்னறை சிறிய லெமன் சைஸ்

தாளிக்க

நல்லெண்ணை
3 மேசை கரண்டி
கடுகு,சீரகம்,சோம்பு,மிளகு
ஒரு மேசைகரண்டி
பூண்டு
6 பெரிய பல்
கருவேப்பிலை
ஒரு கைப்பிடி

தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை
4 ஸ்பூன் (அ) 4 பத்தை

கொத்துமல்லி தழை
அரை கைப்பிடி





செய்முறை

மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.
வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி,கருவேப்பிலை சேர்த்து,2 நிமிடம் வதக்கவும்.
 வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் எல்லா சமசாலா தூள்வகைகள் ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை , தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
 5 நிமிடம் கொதிக்கவிடவும்
thகடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
சுவையான மனமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.


வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. பிளெயின் ரைஸ்,ரொட்டி, தோசை , ஆப்பம் குஸ்கா, மருந்து சோறு, பகறா கானா அனைத்துக்கும் பொருந்தும்.




12. பிரான் சேமியா பிரியாணி 










தேவையான பொருட்கள்


இறால் = கால் கிலோ
சேமியா = கால் கிலோ
உருளை கிழங்கு = 1 (சிறியது)
கேரட் = 1 (சிறியது)
பட்டாணி = ஒரு மேசை கரண்டி
சோளம் = ஒரு மேசைகரண்டி (புரோஷன்)
பீன்ஸ் = ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ = இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் = இரண்டு
தக்காளி = இரண்டு
கொத்து மல்லி தழை = சிறிது
புதினா = சிறிது
எண்ணை = முன்று மேசைகரண்டி
நெய் (அ) டால்டா) = ஒரு தேக்கரண்டி (சேமியா வறுக்க)
பச்ச மிளகாய் = ஒன்று
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = ஒரு பின்ச்
உப்பு = தேவைக்கு
ப‌ட்டை = அரை அங்குல‌ அளவு
ஏல‌ம் = ஒன்று
கிராம்பு = இர‌ண்டு







செய்முறை

இறாலை சுத்தம் செய்து வயிற்றிலும்,முதுகிலும் உள்ள அழுக்கை கீறி எடுத்து விட்டு அரைதேக்கரண்டி வினிகர் ஊற்றி இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி தண்ணீரைவடித்து வைக்கவும்.





சேமியாவை நெய் (அ) டால்டா ஒரு தேக்கரண்டி சேர்த்து கரியாமல் சிவற வருத்து வைக்கவும்.

காய் க‌றிக‌ளை ந‌ன்கு க‌ழுவி அரிந்து வைக்க‌வும்.



சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு, ஏலம் போட்டு வெடிய விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு பெஸ்ட் போட்டு பச்சை வாடை போகும் வதக்கவும்.

கொத்து மல்லி, புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

தக்காளியை பொடியாக நருக்கி சேர்த்து, பச்சமிளகாயும் போட்டு தீயின் அனலை சிம்மில் வைத்து வேக விடவும்.



தக்காளி மசிந்ததும் இறால், அரிந்து வைத்திருகும் காய்கள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்


காய், ம‌ற்றும் இறால் வெந்து ந‌ல்ல‌ கூட்டு போல் எண்ணை தெளிந்து மேலே வ‌ரும், தீயை சிம்மிலேயே வைக்க‌வும்.








வெந்த‌தும் சேமியா ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்னீர் ஊற்றி கொதிக்க விட்டு சேமியாவை போட்டு அடி பிடிக்காமல் கிளறி கொஞ்சமா இருக்கும் போது அடுப்பை அனைத்து விடவேண்டும்.அந்த சூட்டிலீயே இருக்கி தம் ஆகிவிடும்.


புதினா சட்னி, நார்த்தங்காய் ஊறுகாய், இஞ்சி டீயும்.
தொட்டுக்க நல்ல இருக்கும்.







13. தந்தூரி பிஷ் டீப் பிரை 





மீன் வகைகள் ( வஞ்சிர, வ்வ்வால்,சங்கரா,கிளங்கா) - அரை கிலோ
தயிர் - முன்று மேசை கரண்டி
காஷ்மீரி ரெட் சில்லி பொடி – ஒரு மேசை கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கரம் மசாலா – கால் தேக்கரண்டி
ப்ப்பரிக்கா பவுடர் – கால் தேக்கரண்டி
சீரகதூள் – அரை தேக்கரண்டி
பிளாக் (அ) வொயிட் பெப்பர் பொடி – அரை தேக்கரண்டி

அலங்கரிக்க – புதினா,கேரட்






மீன் வகைகளை கழுவி சுத்தம் செய்து மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.ஊறிய மீனை ஒரு ஆழமான வானலியில் டீப் பிரை செய்யவும்



நெய் சாதம் , மிளகு மீன் குழம்பிற்கு குபூஸுக்கு ஏற்ற சைட் டிஷ்.

இதை ஓவனிலும் கிரில் செய்து எடுக்கலாம். இல்லை பார்பி கியு அடுப்பிலும் சுட்டெடுக்கலாம்.






14. ஆலு கோஷ் குருமா - Mutton with potato kuruma








//அருமையான இஸ்லாமிய இல்ல விஷேஷ சமையல். கல்யாணம் அல்லது விஷேசம் மாப்பிள்ளை தஸ்தரில் . இவை அனைத்தும்செய்வோம் (பகறா கானா, ஆலு கோஷ் குருமா. தால்சா, அப்பளம், இனிப்பு வகைகள், ஆனியன் எக்,ஊறுகாய்ம் இஞ்சி டீ (அ) ஹரீரா) //








தேவையானவை




மட்டன்(கோஷ்) - அரை கிலோ

வெங்காயம் - 300 கிராம்
தக்காளி - 300 கிராம்

ஆலு (உருளை) - கால் கிலோ

எண்ணை - 50 மில்லி

டால்டா - ஒரு மேசை கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி

கொத்து மல்லி தழை - கால் கட்டு

புதினா - கால் கட்டில் பாதி

பச்ச மிளகாய் - முன்று

தயிர் - 50 மில்லி

பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு இரண்டு

தேங்காய் பவுடர் - முன்று மேசை கரண்டி

முந்திரி , பாதம் - இரண்டு மேசை கரண்டி

மிளகாய் தூள் - இரண்டு தேகக்ரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தனியாத்தூள் - கால் தேக்கரண்டி

உப்பு தேவைக்கு.








செய்முறை


1.தேவையான பொருட்களை தயாராக வைக்கவேண்டும்.
கறியை சுத்தம் செய்து கழுவி தண்னீரை வடித்து வைக்கவேண்டும்.கொத்து மல்லி புதினாவை மண்ணில்லாமல் கழுவி வைக்கவும்.வெங்காயம், தக்காளியை அரிந்து வைக்கவேண்டும்.


2.குக்கரை காயவைத்து எண்ணை+டால்டா ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு,ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போடு நன்கு வதக்கி தீயை சிம்மில் வைக்க வேண்டும்


3.பிற்கு வெங்காம் நன்கு மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி தீயை சிம்மில் வைக்கவும், நன்கு பச்ச வாடை மாரியதும், கொத்து மல்லி, புதினாவை போட்டு வதக்கி இரான்டு நிமிடம் சிம்மில் வைக்கவேண்டும்.

4.அடுத்து தக்காளி,பச்ச மிளகாயை போட்டு நன்கு வதக்கி சுருள விட வேண்டும்.


5.தக்காளி வதங்கியதும் அதில் மிள்காய் தூள், உப்பு தூள், தனியாதூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.


6 மூடி போட்டு சிறிது நேரம் மசாலாவை சேர விட வேண்டும்.


7.மசாலா நன்கு கிரிப்பானதும் தயிர் மற்றும் கறியை போட்டு கிளற வேண்டும்.


8..ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து எல்லா மசாலாவும் சேரும் வரை கொதிக்க விட வேண்டும்.




9..இப்போது ஆலுவை தோலெடுத்து கழுவி நன்காகவோ எட்டாகவோ அரிந்து போடவேண்டும்.


10.முன்று நிமிடம் கொதிக்க விட வேண்டும்.







11.குக்கரை மூடி போட்டு நாலு விசில் விட்டு கறி வெந்ததும் இரக்கவும்.

12.முந்திரி, பாதம், தேங்காய் பவுடர் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து அதில் கொஞ்சம் கொத்து மல்லி புதினா சேர்த்து வைக்கவும்.


13.குக்கர் ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து தேங்காய் முந்திரி கலவையை ஊற்ற வேண்டும்.


14.தேங்காய் வாடை அடங்கும் வரை தீயை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இரக்க வேண்டும்.

15.சுவையான ஆலு கோஷ் குருமா ரெடி.





குறிப்பு

தேங்காய் பவுடருக்கு பதில் அரை முறி தேங்காயும் அரைத்து ஊற்றலாம்.

கச கசா இருந்தால் அதையும் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.
இது கீரைஸ் பகாறா கானாவிற்கு ஏற்ற சூப்பரான இஸ்லாமிய இல்லத்தில் விஷேஷங்கலில் செய்யும் சால்னா( குழம்பு).

பரோட்டா, ஆப்பம், தோசை, இட்லி ஆகியவற்றிற்கு ஏற்ற குருமாவாகும்.








15. ஆம்பூர் மட்டன் பிரியாணி தேங்காய் தயிர் பச்சடி 











ஆம்பூர் மட்டன் பிரியாணி


சாதரணமாக வடித்து செய்யும் பிரியாணிக்கும் ஆம்பூர் பிரியாணிக்கு வித்தியாசம் இருக்கு. இது ரோட்டோர கடைகளில் பார்சல் பிரியாணிபோல் போடுவார்க்ள், மொத்தமா நிறைய வடித்து தட்ட முடியாது அதற்கு இது போல் வேகவைத்து தண்ணீர் அளந்து ஊற்றுவதால் ஈசியாக செய்து விடலாம்.





பேச்சுலர்களும் ஈசியாக செய்துடலாம்.




தேவையானவை


தரமான பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரைகிலோ
பழுத்த ரெட் பச்ச மிளகாய் - ஆறு
காஷ்மீரிசில்லி (அ) மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
கொத்துமல்லி தழை
புதினா
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை -இரண்டு
உப்பு தூள் - தேவைக்கு (சுமார் ஆறு தேக்கரண்டி)
எண்ணை - 200 மில்லி
நெய் - 50 மில்லி
லெமன் -அரைபழம்






செய்முறை

1. அரிசியை லேசாக களைந்து ஊறவைக்கவும்.

2. மட்டனை கொழுப்பெடுத்து 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.

3. வாயகன்ற பாத்திரத்த காய வைத்து அதில் பட்டை ,ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடியவிட்டு வெங்கயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.

4. வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள்,பழுத்த பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.


5. பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும்.

6. அடுத்து உப்பு,மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.

7. மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வந்ததும்

8. மட்டன் கூட்டு அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தார் போல் தண்ணீர் ஊற்றவும்.
9. ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிடவும்.
10 முக்கால் பதம் வெந்ததும் கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து ,பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.


சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.













தேங்காய் தயிர் சட்னி





இதற்குதொட்டு கொள்ள இஸ்லாமிய இல்ல திருமனங்களில் முன்பு செய்யும் தேஙகாய் தயிர் பச்சடி செய்துள்ளேன்.


தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - கால் கப்
பொட்டு கடலை - ஒன்றும் பாதியுமாய் பொடித்தது இரண்டு மேசை கரண்டி
உப்பு சிறிது
பச்சமிளகாய் - இரண்டு( பொடியாக அரிந்தது)
வெங்காயம் - பெரியது ஒன்று (பொடியாக அரிந்தது)
கொத்து மல்லி தழை - சிறிது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.







முதலில் இந்த பிரியாணிய செய்து சாப்பிடுங்கள், அடுத்து பிரெட் ஹல்வா போடுகிறேன்.