1. தேங்காய்பால் முறுக்கு
தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு - அரை கப்
தேங்காய் பால் - ஒரு கப்
உப்பு - சிறிதளவு
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
எள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்க்கவும்.
பின்பு தேங்காய் பால் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.
பின்பு முறுக்கு சுற்றும் அச்சில் மாவை வைத்து முறுக்கு பிழிந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கை போட்டு பொரிக்க வேண்டும். முறுக்கு நன்றாக வெந்து சிவந்த பிறகு எடுத்து விடவும்.
சுவையான தேங்காய் பால் முறுக்கு தயார்.
2. நீர் உருண்டை
தேவையானவை:
பச்சரிசி -1 டம்ளர்
சின்ன வெங்காயம்-10
தேங்காய் துருவல்-2 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு, உளுந்தம்பருப்பு -1 ஸ்பூன்
எண்ணெய்-1 ஸ்பூன்
வரமிளகாய் -2
கருவேப்பிலை
உப்பு -தேவையான அளவு
அரிசியை ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் மிக்ஸ்யில் கரகரப்பாக அரைக்கவும்..உப்பு சேர்த்து கிளறவும்..
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய்,கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து கருவேப்பிலை ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்..
வதங்கியதும் அரிசி மாவில்தேங்காய் துருவலுடன் இக்கலவையை கலந்து விடவும்..
தேவைக்கு தண்ணீர் சேர்த்து சிறு சிறு உருண்டையாக பிடிக்கவும்..
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து இட்லி சுடுவது போல் இந்த உருண்டையை வேக வைத்து எடுக்கவும்...
நீர் உருண்டை ரெடி...
3. காரவடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 10
சோம்பு - 1 tsp
வெங்காயம் - 1
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
அரிசி மற்றும் துவரம் பருப்பை 6 மணி நேரம் ஊறவைத்து உப்பு காய்ந்த மிளகாய் சோம்பு சேர்த்து அதிகம் தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்.
பொடியாக அறிந்த வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வடையாக தட்டி சுடவும்.
இந்த வடை மொரு மொருவேன்றும் கார சாரமாக இருக்கும்.
No comments:
Post a Comment