சட்னி

1. பச்சை வெங்காய சட்னி




  • உரித்த சின்ன வெங்காயம் - 1 கப்
  • வரமிளகாய் - 8 அல்லது 10
  • புளி - கோலி அளவு
  • கல் உப்பு - தேவையான அளவு
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உ.பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
  • பெருங்காயம் - 2 சிட்டிகை
  • எண்ணை - 1 குழிக்கரண்டி

  • மிளகாய், உப்பு, புளி மூன்றையும் முதலில் மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும். 1 ஸ்பூன் தண்ணீர் விட்டு 2 நிமிடம் ஊர வைத்து மீண்டும் மிக்ஸியை ஓட்டவும். கடைசியாக வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும்.
  • கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணை விட்டு கடுகு, உ.பருப்பு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து எண்ணையுடன் சட்னியில் சேர்த்து கலக்கவும்
  • சுவையான கார சட்னி தயார். கோதுமை தோசை, ரவா தோசை,மைதா தோசைக்கு செம காம்பினேஷன்.



2. கடலைபருப்பு சட்னி




  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • கடலைபருப்பு - இரண்டு தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - 4
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:
  • எண்ணெய் - ஒரு ஸ்பூன்
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு

  • வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய் கடுகு தாளித்து வெடித்ததும் கடலைபருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்
  • ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் அதை ஆறவைத்து மிக்ஸ்யில் நைசாக அரக்கவும்.
  • அரைத்த சட்னியை வேறு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பொடியாக நறுக்கிய கருவேப்பில்லை தூவவும்..
  • இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான கடலைபருப்பு சட்னி ரெடி



3. கத்தரிக்காய் சட்னி


  • கத்தரிக்காய் கால் கிலோ
  • பெரிய வெங்காயம் 3
  • தக்காளி 3
  • மிளகா வத்தல் 8
  • எண்ணை 2 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • கடுகு, உளுத்தம் பருப்பு அரை, அரை டீஸ்பூன்

  • கத்தரிக்கா, வெங்காயம், தக்காளியை பொடிசாக நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணை ஊற்றி முதலில் மிளகாயை வறுத்துபிறகு காய்களையும் சேர்த்து சுருள வதக்கவும்.
  • நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  • கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.



4. கொத்துமல்லி பொட்டு கடலை சட்னி





//கொத்துமல்லி கீரை எடை குறைக்கவும், உடம்பிலுள்ள கழிவுகளை அகற்றவும், இரத்ததை சுத்தபடுத்தவும், மெயினா கேன்சர் நோயாளிகளுக்கு இந்த சட்னி கீமோ தெரபியால் நாக்கு மறத்து போய் சுவை தெரியாமல் இருக்கும் போது இந்த துவையலை அரைத்து அவர்கள் தினம் சாப்பிட்டால் வாய்க்கு ருசிபடும். //



தேவையானவை
கொத்துமல்லி தழை - ஒரு பஞ்ச்
லெமன் - அரை பழம்
பெரிய பச்ச மிளகாய் - ஒன்று
இஞ்சி துறுவல் - கால் ஸ்பூன்
தேங்காய் துறுவல் - இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் - அரை ( தேவைபட்டால்)
பொட்டு கடலை - ஒரு கை பிடி
உப்பு - கால் ஸ்பூன் (ருசிக்கு ஏற்ப கூட்டிகொள்ளவும்)



செய்முறை



1. கொத்து மல்லி தழையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.



2. சிறிது நேரம் தண்ணீரில் மூழ்க வைத்தாலே மண் அடியில் தங்கிவிடும்.
மிக்சியில் பொட்டுகடலை,பச்சமிளகாய், தேங்காய் இது முன்றையும் ஒரு திருப்பு திருப்பவும்.
3.பிறகு இஞ்சி துறுவல், லெமன் சாறு,உப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.


குறிப்பு:-

தோசை, ஆப்பம், இட்லி, உப்புமா, சேமியா பிரியாணி,குழிபணியாரம் எல்லா வகையான உணவு களுக்கும் பொருந்தும்




5. தக்காளி இஞ்சி சட்னி


அரைக்க‌


நன்கு பழுத்த தக்காளி = நான்கு
இஞ்சி = ஒரு அங்குல துண்டு
கான்ச் மிளகாய் = ஒன்று
தேங்காய் துருவல் = ஒரு மேசை கரண்டி
உப்பு = சிறிது

தாளிக்க‌

எண்ணை = அரை தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
பெருங்காயம் = ஒரு பின்ச்

செய்முறை

த‌க்காளியை பொடியாக‌ அரிந்து, இஞ்சியை தோல் நீக்கி பொடியாக‌ அரிந்து அத்துட‌ன் த‌க்காளி,உப்பு, காஞ்ச‌ மிள‌காய் சேர்த்து ந‌ன்கு அரைக்க‌வும்.

தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான‌ த‌க்காளி இஞ்சி ச‌ட்னி ரெடி
குறிப்பு


இது க‌ர்பிணி பெண்க‌ள் வாய்க்கு ருசி ப‌டும்.தோசைக்கு தொட்டு கொள்ள‌ சூப்ப‌ராக‌ இருக்கும், செய்வ‌தும் சுல‌ப‌ம்.

எல்லாவகையான தோசை அடைக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.



6.மாங்காய் சட்னி
தேவையானவை:

  • புளிப்பான சிறிய மாங்காய் ஒன்று
  • துருவிய தேங்காப்பூ ஒரு மூடி
  • பச்சை மிளகாய் 3
  • கடுகு ஒரு டீஸ்பூன்
  • உளுந்து ஒரு டீஸ்பூன்
  • மிளகா வத்தல் 2
  • பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணை 2ஸ்பூன்

  • மாங்காயை நன்கு கழுவி, தோல் சீவி மிருதுவாகத் துருவிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணை ஊற்றி,கடுகு, பருப்பு, மிளகாவத்தல் சிவக்க வறுக்கவும்.
  • இத்துடன் தேங்கா பூ,மிளகாய் மாங்கா துருவல் பெருங்காயம் சேர்க்கவும்.
  • உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.


7. வேர்க்கடலை சட்னி

  • தேவையானவை:
  • வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை -- ஒரு கப்
  • தனியா, ஜீரகம், கடுகு -- தலா ஒரு, ஒரு ஸ்பூன்
  • மிளகா வத்தல் -- 5
  • எண்ணை -- ஒருஸ்பூன்
  • உப்பு -- தேவையான அளவு

  • கடாயில் எண்ணை ஊற்றி தனியா,ஜீரகம்,கடுகு, மிளகாய் சிவக்கவறுத்து ஆறியதும் வேர்க்கடலையுடன்உப்பும் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.